தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் சுப்ரமணியபுரம் பத்திரகாளியம்மன் கோயில் மற்றும் சிஎஸ்ஐ தேவாலய தரப்பினர் கிடையே பல ஆண்டுகளாக இடப்பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த பிரச்சினை நீதிமன்ற தீர்ப்பின்படி 13 -ம் தேதி பத்ரகாளி அம்மன் கோவில் சார்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்க இருந்த நிலையில் இருதரப்பினருக்கு இடைய பிரச்சினை மேலும் வலுத்தது.
இதனால் கடந்த பத்து நாட்களாக பதட்டம் நீடித்த நிலையில் கடந்த சனிக்கிழமை காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்துறையினர் அளவீடு செய்துமுடித்தனர்.
இதனை தொடர்ந்து பத்திரகாளியம்மன் கோயில்தரப்பினர் சுற்றுச்சுவர் கட்டும் பணியினை இன்று தொடங்கினர். சுவர் கட்டும் பணியை நிறுத்திட வேண்டுமென்று சிஎஸ்ஐ தேவாலய தரப்பினர் அங்குள்ள காமராஜர் சிலை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்ரகாளியம்மன் கோயில் தரப்பிலும் சுற்றுச்சூழல் கட்டுவதை நிறுத்த முடியாது என்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது இரு தரப்பினரையும் உடனே அங்கிருந்து களைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தும் இரு தரப்பினர் முற்றுகைப் போராட்டம் தொடர்வதால் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இதனால் செய்வது அறியாது காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.