தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில், சில்வரபுரம் பகுதியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் விஜய சுந்தர், சின்னத்தம்பி பாண்டியன், நாகராஜ், வெற்றிவேல், மோகன்தாஸ், முருகன், ஜேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டு காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
காப்பகத்தின் காப்பாளர்கள் அருள் தந்தை ஜான், பிரதர் வில்லியம், ஜெபம் செய்து கிறிஸ்மஸ் விழாவை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.பி வாரியார், சுவைதர், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ரமேஷ், மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் மகாராஜன், துணைத் தலைவர் சுகின்குமார், சுரேஷ்குமார், வெங்கடேஷ் மண்டல் தலைவர்கள் சிவகணேசன், துணைத்தலைவர் லட்சுமணன், சொக்கலிங்கம், பஜ்ஜி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.