Thupparithal
செய்திகள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்!.

சமூக, வகுப்பு நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் கபீர் புரஸ்கார் விருது பெற தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022 ஆம் ஆண்டிற்கான ‘கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது தகுதியுடைய நபர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 வீதம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.

மேலும் இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மற்றும் http://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் : 14.12.2022. மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் முகவரியில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,

மாவட்ட விளையாட்டரங்கம்,

தூத்துக்குடி – 628001

போன் : 0461 2321149

Related posts

தூத்துக்குடியில், விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கை, கால் செயல் இழந்த ஒருவரை உயர்தர சிகிச்சை மூலம் காப்பாற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Admin

தூத்துக்குடி தூய இஞ்சாசியாா் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Admin

தூத்துக்குடி வஉசி சாலையில் உள்ள யூனியன் வங்கியை மற்றொரு கிளையுடன் இணைக்க முற்படுவதை கண்டித்து வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

Admin

Leave a Comment

error: Content is protected !!