இம்மானுவேல் சேகரனாரின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் அமைந்துள்ள இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தல் பேரில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில் நகர மன்ற உறுப்பினர் கவியரசன் முன்னிலையில் இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பாண்டரமங்கத்தில் அமைந்துள்ள இம்மானுவேல் சேகரனாரின் மணிமண்டபத்தில் இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், நகர மன்ற உறுப்பினர் செண்பக மூர்த்தி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரன்,அங்குசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் அருமை ராஜ், கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் மணிராஜ், அதிமுக நிர்வாகிகள் ஜெயந்தி சரவணன், சண்முக கனி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.