Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி தி.மு.க கவுன்சிலருக்கு உலக மனித சமாதான பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது..!

தூத்துக்குடி மாநகராட்சி 50வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ள சரவணக்குமார் தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள பிரையன்ட் நகர் பகுதியில் இந்தியன் பவர் ஜிம் என்ற பெயரில் உடற்பயிற்சி கூடத்தை 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

அதில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்களில் 80க்கும் மேற்பட்டோர் காவல் துறையில் காவலராகவும், அதிகாரிகளாகவும் இருபதுக்கும் மேற்பட்டோர் இராணுவ வீரர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் வனத்துறை அதிகாரிகளாகவும், பல்வேறு துறைகளில் உயர்ந்த இடத்திற்கு பலர் சென்றுள்ளனர்.

ஒரு மனிதனுக்கு அறிவு திறனை வளர்ப்பதற்கு கல்வி அறிவு முக்கியம் அதேபோல் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்ச்சியும் முக்கியம், என்பதை எல்லோரும் அறிவார்கள். அதில் ஆர்வம் காட்டி பயனளிப்பவர்கள் சிலர் தான் இருப்பார்கள். சாதிக்க வேண்டும் என நினைப்பவர் ஜாதி மதத்தை கடந்து தனது இலட்சியத்தை நோக்கி சென்று கொண்டே இருப்பார்கள்.

இதுபோன்ற பலரையும் உருவாக்கிய இந்தியன் பவர் ஜிம் உரிமையாளரும் 50வது வார்டு தி.மு.க கவுன்சிலருமான சரவணக்குமார் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் பணியை செய்து கொண்டு வருகிறார். மனித நேயத்தோடு பணியாற்றும் மாமனிதர்களை தேர்வு செய்து வரும் பாரத் சேவை சமாஜ் ஏற்பாடு செய்த உலக மனித சமாதான பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் கவுன்சிலர் சரவணக்குமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தனர். இதனையெடுத்து தி.மு.க நிர்வாகிகள் பிரமுகர்கள் பொதுநல அமைப்பை சார்ந்தவர்கள் பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், கவுன்சிலர் சரவணக்குமார் கூறுகையில், அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராமல் அவர்கள் கூறும் கட்டளையை ஏற்று மக்கள் நலன் தான் முக்கியம் என்று அவர்களது வழியில் எனது வார்டு பகுதி மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஜாதி மதம் பாராமல் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.

Related posts

பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா ஸ்கிப்பிங் விளையாட்டில் உலக சாதனை..!.

Admin

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர திமுக இளைஞரணி சார்பில் தூத்துக்குடியில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கும் முகாம்- அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!.

Admin

இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி; தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

Admin

Leave a Comment

error: Content is protected !!