ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் தூத்துக்குடி, தெற்கு மாவட்ட தலைவர் ஓம்பிரபு அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுடைய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் கோயிலிலே தங்கி இருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள்.
முருகப்பெருமானுக்கு மாபெரும் விழாவாக எடுக்கக்கூடிய இந்த சஷ்டி திருவிழாவை , முருக பக்தர்களுக்கு வேதனையும் அவர்கள் பக்தியை அவமதிக்கும் பொருட்டு இவ்வாண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது (வேலியே பயிரை மேய்ந்தது போல்) இந்து சமயத்தையும், முருகப்பெருமானுடைய பக்தி மார்க்கத்தையும் போற்றிக்காக வேண்டி இந்து சமய அறநிலைத்துறை கையில் வைத்துக் கொண்டு) தொடர்ச்சியாக இந்து மக்களை இழிவாக பேசி வரும் #திராவிடியன் #ஸ்டாக் என்று சொல்லக்கூடிய தமிழக முதல்வர் இந்து விரோத போக்கை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.