அதிமுகவின் 50வது ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வரும், இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பெயரில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் பேரூராட்சியில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அதிமுக எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், நகர துணைச் செயலாளர் சிவசிவ மாரியப்பன், இலக்கிய அணி செயலாளர் வேலுச்சாமி, மகளிரணி செயலாளர் செல்வி, வார்டு செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.