Thupparithal
ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு பிரமாண்ட ஏற்பாடு; திருக்கோயில், இணை ஆணையர் அறிக்கை!.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், இணை ஆணையர்/ செயல் அலுவலர் ம.அன்புமணி அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் சிறப்பு ஸ்தலமாகும்.

கந்த சஷ்டி திருவிழா இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற முக்கிய திருவிழாவாக நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவில் சுமார் 5 இலட்சம் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹார திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 28.09.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் சுமார் 300 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு (Master Plan) பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேற்படி பணி அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து , பணிகள் துவக்கப்பட்டு பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாலும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலனை கருத்தில் கொண்டும் திருக்கோயில் உள்ளே உள்ள உட்பிரகாரம் (பாந்து) இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை.

ஆகவே திருக்கோயில் வெளி வளாகத்தில் கந்த சஷ்டி திருவிழாவிற்கு விரதமிருக்கும் பக்தர்கள் தங்கி இளைப்பாற சுமார் 12க்கும் (வசந்த மண்டபம், வேலவன் விடுதி, கலையரங்கம் பின்புறம், திருமண மண்டபம், திருநீறு மண்டபம், கலையரங்கம் கார் பார்க்கிங், வடக்கு டோல்கேட், திருப்பணி மண்டபம், பேருந்து நிலையம் -2 , பேருந்து நிலையம் உணவுக் கூடம், கிழக்கு கிரி பிரகாரம் ) மேற்பட்ட இடங்களில் தற்காலிக நிழற்கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், மேற்கண்ட பணிகள் கந்த சஷ்டி திருவிழா துவங்குவதற்கு முன்பாக நிறைவு செய்யப்படும். மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்தில் 7 இடங்களில் 237 கழிப்பறை வசதிகள் உள்ளது.

மேலும், பாதயாத்திரையாகவும், தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தற்காலிக கழிப்பறைகள் ஆண்களுக்கு 50 எண்ணம், பெண்களுக்கு 50 எண்ணம் செய்து கொடுக்கப்படும். மேலும் ஆங்காங்கே திருக்கோயில் முறை வரிசைகள் மற்றும் திருக்கோயில் வளாகங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்துறையில் 21 இடங்களிலும், வெளிப்பிரகாரத்தில் 26 இடங்களிலும் தன்னார்வ நிறுவனம் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்படி வசதிகளை பக்தர்கள் பயன்படுத்தி தங்கள் விரதங்களை உரிய முறையில் கடைப்பிடித்து திருச்செந்திலாண்டவர் திருவருள் பெற்று செல்ல வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

செல்வம் பட்டரிடம் பயின்ற தூத்துக்குடி மாணவர்கள் பாசக்காரர்கள் என்று உலகம் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும்-மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல் பேச்சு!.

Admin

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அமைச்சர், மேயர், கலெக்டர், எஸ்.பி, ஆணையர், முன்னாள் அமைச்சர், பங்கேற்பு!.

Admin

தூத்துக்குடி மேலசண்முகபுரம்,, சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில்களில் பிரமாண்டமாக நடைபெற்ற வரலட்சுமி பூஜை..!

Admin

Leave a Comment

error: Content is protected !!