உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆக.5ம் தேதி வரை நடைபெறும். பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்திருவிழா மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் பல பகுதியிலிருந்து லட்சக்கணக்கான இறைமக்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு பனிமயமாதா பேராலய 16வது தங்கதேர் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் இறைமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனை முன்னிட்டு நேற்று மாலை பங்கு தந்தை லெரின் டி.ரோஸ் தலைமையில் கொடிப்பவனி நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை காலை 4.30 மணிக்கு ஜெபமாலை நடைபெற்று 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45க்கு 2ம் திருப்பலியும், அதனை தொடர்ந்து 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், ஆலயத்தின் முன்னுள்ள கொடிக்கம்பத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ பனிமய மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநில மீணவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலதலைவர்கள் நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல் ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, தகவல்தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் பவாணி மார்ஷல், மெட்டில்டா, ரிக்டா, எடின்டா, ரெக்ஸின், வட்டச்செயலாளர்கள் டென்சிங், அன்டோ, ரவிசந்திரன், மற்றும் பாஸ்கர், கருணா, அல்பட், மணி, பிரபாகர், ஜோஸ்பர், மகளிர் அணி பெல்லா, பரதர் நலசங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர், செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, பொதுச்செயலாளர் இன்னாசி, குரூஸ்பர்னாந்து நற்பணி மன்ற அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் எட்வின்பாண்டியன், தலைவர் ஹெர்மன்கில்ட், மாதா கோவில் பங்குபேரவை துணைத்தலைவர் ஹாட்லி, செயலாளர் கென்னடிவாஸ், பொருளாளர் ஜாய் ரோச், இணைச்செயலாளர் நேவிஸ் அம்மாள், தெற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளரும், புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவருமான சோபியா, முன்னாள் கவுன்சிலர்கள் அருள், செந்தில்குமார், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் ஜீவாபாண்டியன், சகாயராஜ், ஞாயம் ரோமால்ட், ஜெனோபர், டென்ரஸ், ராஜாதுரைசிங், சங்கர், கௌதம், மணிகண்டன், பிரபாகர் பொன்னுகவுன்டர் விக்னேஷ் மற்றும் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள், கலந்து கொண்டனர்.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 6 ஏடிஎஸ்பிகள், 12 டிஎஸ்.பிகள், மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயவளாகம் அருகே தற்காலிகமாக இரு கண்காணிப்பு கோபுரங்கள் போலீசார் அமைத்துள்ளனர்..
ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இயேசு சபையினர், லசால் அருட் சகோதரர்கள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்துள்ளனர். ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள்.
கொடியேற்றத்தை முன்னிட்டு சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மற்றும் துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிக்கப்பட்டது.