தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் அய்யனார், முன்னிலை வகித்தார் கோவில்பட்டி நகராட்சி நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2022 ,2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு பயின்று தற்போது 12ஆம் வகுப்பு பயிலும்151 மாணவர்களுக்கு விலையில்லா மீதி வண்டிகளை வழங்கினார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுஜாதா நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிகளை முதுகலை ஆசிரியர் வளர்மதி தொகுத்து வழங்கினார்.
இவ்விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஆசிரியர் வழிகாட்டும்படி ஆசிரியர்கள் சிறப்பாக செய்தனர்.