Thupparithal
செய்திகள்

7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான பாஸ் தி பால் கோப்பைக்கான வரவேற்பு – ஹாக்கி விளையாடிய அமைச்சர் கீதா ஜீவன்,, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

7-வது “ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி” ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023” போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை ராடிசன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் -2023 போட்டியினை சென்னையில் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023 கோப்பை முதலாவதாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பாஸ் தி பால் – கோப்பை சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாக ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பயணிக்கிறது.

இந்தக் கோப்பை இன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கோப்பையை வரவேற்றனர். தொடர்ந்த பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

மேலும், அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரனுடன் மற்றும் சிறுவர் ஒருவருடன் ஹாக்கி விளையாடி அசத்தினர். தொடர்ந்து 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டியை முன்னிட்டு, செயற்கை புல்வெளி மைதானத்தின் பின்புற பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.

கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளர் அருணாச்சலம், கோட்டாட்சியர் ஜெயா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் ஹாக்கி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

திருநெல்வேலி டவுண் முதல் குறுக்குத்துறை செல்லும் சாலைக்கு தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் பெயர் சூட்டுதல்; மேயருக்கு வாழ்த்து தெரிவித்த தொழிலதிபர்கள்!.

Admin

வஉ. சிதம்பரனாரின் 86 வது ஜெயந்தி – விழா! – மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை!

Admin

தூத்துக்குடியில், எதிர்பாராத விதமாக சரிந்த விசைப்படகு; படகின் அருகில் இருந்த இருவருக்கு பலத்த காயம்; தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதி!.

Admin

Leave a Comment

error: Content is protected !!