Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில் எல்பிஜி முனைய சேமிப்பு திறனளவை 30,000 மெட்ரிக் டன்கள் அதிகரிப்பு செய்து இன்று தொடங்கப்பட்டது.

எஸ்ஹெச்வி எனர்ஜி நிறுவனம், சிங்கப்பூரை அடித்தளமாக கொண்டு இயங்கி வருகிறது. அதன் வர்த்தக செயல்பாட்டுப் பிரிவான S&RM (சப்ளை & ரீசர்ச் மேனேஜ்மெண்ட்) வழியாக தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தூத்துக்குடி நகரில் அமைந்துள்ளது. அதன் கிரையோஜெனிக் எல்பிஜி (திரவ நிலை பெட்ரோலிய வாயு) சேமிப்பு முனைய கொள்ளளவு வசதியை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த விரிவாக்கம், முதன்மையாக எஸ்ஹெச்வி எனர்ஜியின் இந்திய துணை நிறுவனமான சூப்பர்கேஸ் மூலம் இந்திய சந்தைக்கு எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்கிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் அமைந்திருக்கும் எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறன் தற்போதைய 8,500 மெட்ரிக் டன்னிலிருந்து, 38,500 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் 500 கோடி முதலீடு இதற்காக செய்யப்படும். இந்த முனையத்தின் விரிவாக்க செயல்பாடு, எஸ்ஹெச்வி எனர்ஜி-ன் தலைமை செயலாக்க அதிகாரி பிராம் கிராபெர், சூப்பர்கேஸ் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி சாந்தனு குஹா ஆகியோர் முன்னிலையில் இன்று தூத்துக்குடி துறைமுக சேர்மன் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Related posts

தூத்துக்குடி அருகே, மின் சிக்கன விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

Admin

ஸ்டெர்லைட் ஆலையை நவீனப்படுத்தி ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் நிறுவன தலைவர் பேட்டி!.

Admin

தேவர் திருமகனாரின் 115 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை – மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

Admin

Leave a Comment

error: Content is protected !!