தூத்துக்குடி பழைய மாநகராட்சி கிழக்கு மண்டலம் வளாகத்தில் அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், விடுதலை போராட்ட வீரர், வ.உ.சிம்பரனாரின் 86வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அவரது தியாகத்தை போற்றும் விதமாக ஐஎன்டியூசி மாநில செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் வஉசி. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, வர்த்தக காங்கிரஸ் நகர தலைவர் ஏ.ஜே. அருள்வலன், மாநகர பொதுச் செயலாளர் இக்னேஸியஸ், கலை பிரிவு மாவட்ட தலைவர் பெத்து ராஜ், டி.சி.டி.யு. மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், தெற்கு மண்டல பொதுச் செயலாளர் ஏ.டி. தனசேகரன், எஸ்சி.எஸ்டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், எஸ்சி.எஸ்டி. மாநில பொருளாளர் பிரபு, ஊடக பிரிவு சுந்தர் ராஜ், மீனவர் அணி மிக்கேல்குரூஸ், ஜான் வெஸ்லியன், சேரையா, கன்னிச்சாமி பாண்டியன், செல்வம், பால சுப்ரமணியன், பாலகிருஷ்ணன், முத்துராஜ், முத்துராஜா, சிவாஜி விஜயா, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.