கப்பலோட்டிய தமிழன், விடுதலை வீரர், செக்கு இழுத்த செம்மல், வ.உ.சிதம்பரனாரின் 86 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, திமுக 39 பகுதி வட்டகழக செயலாளர் கீதா செல்வமாரியப்பன், மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.