மேகதாட்டு அணை விவகாரம், அனைவருக்கும் பெண்கள் உரிமைத் தொகை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, அத்தியாவசியப் பொருட்கள், மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவை தொடர்பாகவும், திமுகவைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தலைமையில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் கிழக்கு மண்டல் 22 வது வார்டு பகுதி திரவியபுரம் மெயின் ரோட்டில் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவரும், சக்தி கேந்திர பொருப்பாளருமான தேவகுமார் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் சிவராமன் கலந்து கொண்டார்.
பின்னர், திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாலர் சிவலிங்கம், இந்து முண்ணனி மாநகர மாவட்ட செயலாலர்கள் ராகவேந்திரா, சிவலிங்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மண்டல தலைவர் பாஸ்கர், பூத் தலைவர்கள் மாரிமுத்து, மாரியப்பன், மதிராஜன், மற்றும் 22 வது வார்டுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.