தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தில் “அருள்மிகு” ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா, ஸ்ரீ கொம்பு மாடசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளி பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன், கயத்தார் நகர பொருளாளர் சசிகுமார், சவலாப்பேரி கிளைச் செயலாளர் முருகன், அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் மாயா துரை,கடம்பூர் விஜி, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.