Thupparithal
அரசியல்

உதயநிதி அமைச்சராக பதவியேற்பு; விளாத்திகுளத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகன் இளைஞரணி செயலாளர், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை கொண்டாடும் விதமாக விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூர் கழகச் செயலாளர்
வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர்
சின்னமாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மிக்கேல்நவமணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், ராமலிங்கம், கிருஷ்ணகுமார் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, அய்யனார், சுப்புராஜ், சிவசுப்பிரமணியன், சுப்புராஜ், லெனின், ராஜதுரை, சங்கரலிங்கம், முத்துமாரியப்பன், மாரிராஜ் பேரூர் கழக துணை செயலாளர் வேலுச்சாமி பேரூர் கழக பொருளாளர் சரவணன் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கனகராஜ் விளாத்திகுளம் பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர், இளைஞர் அணிமாடசாமி, சிவா, பாலா, இசக்கி, வில்லியம், பூவேல்ராஜ் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கோவில்பட்டி அருகே புதிதாக அமையவுள்ள இந்தியன் வங்கி இடத்தினை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

Admin

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு உண்டான தடையை தமிழக அரசு உடனடியாக தகரக்க வேண்டும்- தமிழக முதல்வருக்கு சற்குரு சீனிவாச சித்தர் கோரிக்கை மனு!.

Admin

திருடனை கூட நம்பிவிடலாம்.. ஆனால் திமுக காரனை நம்பக்கூடாது.. திமுகவிற்கு ஓட்டு போடுவதும் குரங்குக்கு கோர்ட் போடுவதும் ஒன்றுதான்-தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா-வின் முழு பேச்சு……!

Admin

Leave a Comment

error: Content is protected !!