தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகே பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, உள்ளிட்ட விலைவாசி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, மோகன், மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மனுமான காந்தி என்ற காமாட்சி ஆகியோர் தலைமையில், புதியம்புத்தூர் நகரச் செயலாளர் ஆறுமுகசாமி, மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி கோபி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு உயர்த்திய விலைவாசி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கண்டன முழக்கங்களை எழுப்பப்பட்டது.
ஆர்பாட்டத்தில், ஓட்டப்பிடாரம் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ், ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், துணைச் செயலாளர் முருகேசன், ஆதிலிங்கம், வக்கீல் அணி பரமசிவன், இளைஞர் அணி சின்னத்துரை, தகவல் தொழில் நுட்ப அணி ராஜேஷ்குமார், வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகி தங்கவேல், மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.