அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவின் பெயரில், பரமக்குடி நகரம், பரமக்குடி ஒன்றியம் நயினார்கோவில் ஒன்றியம், போசுனூர் ஒன்றியக் கழகங்களின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேருஜி மைதானத்தில் நடைபெற்றது.
செயலாளர் லா.ரவீந்திரன் தலைமையில், நிர்வாகிகள் ஜெயசங்கர், தவமணி, சீனிவாசன், ராமநாதன், கோவிந்தன், பூவேந்திரன், முனியசாமி, நாகராஜன், காளிதாஸ், முருகேசன், ராஜ்குமார், முத்துகிருஷ்ணன், கண்ணன், தனுஷ்லால், கனகராஜ், குமாரவேல், தமிழ்ச்செல்வன், கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ஜெ பேரவை செயலாளர் எடமலையான் வரவேற்புரையாற்றினார்.
மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில்; மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், 1972ல் தொடங்கிய காலத்தில் முதலில் சந்தித்த தேர்தலில் வெற்றிக்கண்டு அவர் மறையும் வரை தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்றினார். எல்லா தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் பணியாற்றியதின் காரணமாக இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு பிறகு ஜெயலலிதா கட்சி பணிகளையாற்றி முதலமைச்சராக பணியாற்றி ரானுவ கட்டுபாட்டை போன்று அதிமுகவை தொடர்ந்து வழி நடத்தினார். அவரது மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கான ஆட்சியை நடத்தி சாதனை படைத்தார்.
திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. அதிமுக ஆட்சி தான் எல்லோருக்கும் பொற்கால ஆட்சி, இனி எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான இரட்டை இலை சின்னம் தான் வெற்றிபெறும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் களம் அமைத்து வெற்றி காண்போம். இதற்கு அனைவரும் ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான முனியசாமி, பட்டணம் நைனா முகம்மது உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில், எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர்கள் ஆனிமுத்து, சாமிநாதன், ரத்தினம், விவசாய அணி இணைச்செயலாளர் கருணன், தொழிற்சங்க துணைச்செயலாளர் ரத்தினம், தலைமை செயற்குழு உறுப்பினர் சௌந்தரவள்ளி, மாவட்ட துணைச்செயலாளர்கள் பாலாமணி மாரி, பாதுஷா, இணைச்செயலாளர் கவிதா சசிகுமார், பரமக்குடி நகர செயலாளர் ஜமால், ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, லோகிதாசன், காளிமுத்து,
மாவட்ட அணி நிர்வாகிகள் சர்வேஷ், சர்பூதி, சேது பாலசிங்கம், ஸ்டாலின் என்ற ஜெயசந்திரன், கோவிந்தராமன், ஜெயிலானி, அருள், செந்தில்குமார், பழனியாண்டி, பிரகாஷம், நாகராஜன், ஐயான், ராதாகிருஷ்ணன், ராபர்ட், சரவணக்குமார், உதுமான் அலி, தர்வேஸ், பெரியசாமி தேவர், கிருஷ்ண மூர்த்தி, கார்மேகம், மாரிதேவன், வரதன், போஸ்,
தூத்துக்குடி நிர்வாகிகள்; ஜெ பேரவை இணை செயலாளர் ஜீவாபாண்டியன், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் பால்ராஜ், போக்குவரத்து முன்னாள் மண்டல இணை செயலாளர் சங்கர், வட்டச்செயலாளர் துரைசிங், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலாளர் கௌதம், வட்டப்பிரதிநிதிகள் மணிகண்டன், சுப்புராஜ், காசி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர்க்காவலன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக, நகர ஜெ.பேரவை தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான முத்துக்குமார் நன்றியுரையாற்றினார்.