தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பொதுமக்கள் பலர் பல்வேறு பகுதி சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. அதை சரிசெய்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் தெரிவித்திருந்த நிலையில், டேவிஸ்புரம் முதல் சிலுவைப்பட்டி சாலை, தாளமுத்துநகர் முதல் சவேரியார்புரம் சாலை, மாதாநகர் முதல் வண்ணார்பேட்டை, மாதாநகர் முதல் ராஜபாளையம் சாலை, சோட்டையன் தோப்பு முதல் கேவிகே சாமி நகர் சாலை, தொழுநோய் மருத்துவமணை ஆரோக்கியபுரம் சாலை ஆகிய 6 பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
பின்னர் சண்முகையா எம்.எல்.ஏ கூறுகையில்; தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்கள் நலன் தான் எனக்கு முக்கியம் என்று தினமும் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் இப்பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
அதனடிப்படையில் அந்த பகுதியில் உள்ள சாலைகளை மழைகாலங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
ஆய்வின் போது, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், நாகராஜ், பொறியாளர் தளவாய், மாவட்;ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஜேசு, சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட பலர் உடனிருந்தனர்