Thupparithal
செய்திகள்

தமிழ் கடவுளின் திருவிழாவில் தமிழன் தங்கி விரதமிருக்க தடையா? இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் கட்டம்!

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வசந்தகுமார் அறிக்கையில் கூறியுள்ளதாவது; திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் சஷ்டி பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்துக்கள் ஒரு வார காலம் விரதம் இருந்து சஷ்டி விழாவில் கலந்து கொள்வது நடைமுறை வழக்கம்.

தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.. சுப்ரமணியசாமி திருக்கோவிலின் முக்கிய திருவிழா கந்த சஷ்டி திருவிழா இத்திருவிழாவை பக்தர்கள் தங்கி இருந்து விரதம் இருப்பது இன்று, நேற்று அல்ல காலம் காலமாக பின்பற்றி வருகிறோம்.

இந்த வழக்கத்தை கடந்த முறை கொரோனா தொற்று நோய் காரணமாக சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பக்தர்கள் தங்குவதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்தது. அதனை ஏற்றுக் கொண்டு அமைதி காத்தோம். ஆனால் இந்த வருடம் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாத இந்த நேரத்தில் திருச்செந்தூர் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்து அங்கே தங்கி இருக்கக்கூடிய பக்தர்களை அப்புறப்படுத்துவது என்பது எங்களுடைய மத நம்பிக்கையையும், எங்களுடைய இறை வழிபாட்டின் உரிமையையும் இந்த அரசு பறிக்கிறதோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.

ஆகவே மாவட்ட நிர்வாகமானது பக்தர்கள் தங்குவதை தடை விதித்து இருப்பதை ஆலோசனை செய்து அவர்களை தங்கி விரதம் இருக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் எனவும், குறிப்பாக, மாவட்ட நிர்வாகம் திருச்செந்தூர் திருக்கோவிலில் தங்கியிருப்பதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால், வருடம் தோறும் திருச்செந்தூரில், திருக்கோவிலை வைத்து சம்பாதிக்கும் தனியார் மற்றும் திருக்கோவில் விடுதிகளில் பக்தர்கள் இலவசமாக தங்கி இருந்து விரதம் இருப்பதற்கு உத்தரவிட வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

Admin

தூத்துக்குடி, சிலுவைப்பட்டியில் நீர், மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.

Admin

தூத்துக்குடியுடன் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை இணைக்க எதிர்ப்பு: வாலிபர் தீக்குளிக்க முயற்சி.

Admin

Leave a Comment

error: Content is protected !!