சட்ட மாமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நாடுமுழுவதும் அவரது அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ்,மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா,செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி,மாவட்ட துணைதலைவர்கள் தனபால்ராஜ்,பிரபாகரன்,அருணாசலம்,ஜெயராஜ், முத்துபாண்டி,சின்னகாளை,மாவட்ட செயலாளர்கள் கோபால்,நாராயணசாமி,காமாட்சிதனபால்,அமைப்புசாரா மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர்,முன்னாள் நகர தலைவர் அழகுவேல்,வார்டு தலைவர்கள் முத்துராஜ், மகாலிங்கம்,தனுஷ்,ஜெபமாலை,மகாராஜன்,விஸ்வநாதன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.