சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தென்பாகும் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கரின் முழு திரு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, பொதுகுழு உறுப்பினர் கோட்டு ராஜா, அவைத்தலைவர் செல்வராஜ்,மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சரவணகுமார்,பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம்,மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, மருத்துவர் அணி அருண்குமார், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி மாவட்ட பிரதிநிதி சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.