முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதும் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் 39 வார்டு வட்ட கழக செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 39வது வார்டுக்குட்பட்ட சிவன்கோவில் தேரடி பகுதியில் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான எஸ் பி சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தன்ராஜ், 39 வட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், ஒர்க்ஷாப் ரமேஷ், மத்திய வடக்கு பகுதி இளைஞரணி துணைச் செயலாளர் எஸ் பி டைகர் சிவா, மந்திரமூர்த்தி, மணிகண்டன், மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.