தூத்துக்குடி தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பாக தேசிய மாசுக்கட்டுபாடு தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பசுமைப்படை பொறுப்பாசிாியா் ராஜகுமாா் சாமுவேல் அனைவரையும் வரவேற்றாா். துவக்கவுரையாக பள்ளியின் தலைமையாசிாியா் சேசு அந்தோணி மாசுக்கட்டுபாடு குறித்த செய்திகளையும், வாகனப்புகையையும் நாம் எவ்வாறு கட்டுபடுத்த முடியும் என்பது குறித்த தெளிவான விளக்கவுரை அளித்தாா்கள்.
மாணவ உறுப்பினா்கள் அனைவரும் உயிா்பன்மய பாடல்கள் பாடினர். தொடா்ந்து, மாணவ உறுப்பினா்கள் மாாிச்செல்வம். சந்தனகுமாா், மாயா, மதிப்பிாியா, பிலோமினா, டிமெல் ஆகியோரின் கவிதை பாடல் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
தலைமையுரையாற்றிய அறிவியல் ஆசிாியை நேவிஸ் மாசுக்கட்டுப்பாடு குறித்த கருத்துக்களை சிறப்பாக எடுத்துக்கூறினாா். அனைவரும் சேர்ந்து வாகனப்புகையை கட்டுபடுத்த முயற்சி செய்வோம் என உறுதி மொழி எடுத்தனா்.
இறுதியாக, ஆசிாியை சுகவதி நன்றிரையாற்றினாா்கள்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிாியா் ராஜகுமாா், சாமுவேல் மற்றும் மாணவ உறுப்பினா்கள் சிறப்பாக செய்திருந்தனர்.