தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும்.
பக்தர்கள் வசதிக்காக முன் மண்டபம் கட்ட தண்டுபத்து நா. சண்முகப் பெருமாள் நாடார் இங்கு– பிச்சமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியில் பணிகள் தொடக்க விழா கடந்த ஜூன் மாதம் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
தசரா திருவிழாவை முன்னிட்டு முன் மண்டப கட்டிடப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், கட்டிட பணிகள் தொடங்கியது. இதில் கட்டிட பணி நண் கொடையாளர் தண்டுபத்து ராமசாமிநாடார், கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் உட்பட பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.