மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வகையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்துகுட்பட்ட பகுதியில் இன்று பனை விதை நடும் நிகழ்ச்சி அதிமுக நிர்வாகி பி.கே நாகராஜன் தலைமையில், நடைபெற்றது.
இதில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு இலுப்பையூரணி பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.