Thupparithal
செய்திகள்

விரால் மீன்கள் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!.

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் “விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 08.12.2022 அன்று வழங்கப்பட உள்ளது

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில் நுட்பம்” பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 08.12.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு வாயிலாகவோ பணத்தை செலுத்தலாம்.

பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 07.12.2022 மாலை 5.00 மணிக்குள் அலைபேசி மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: உதவி பேராசிரியர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி -628 008 அலை பேசி எண் (8072208079, 9600205124)
மின் அஞ்சல்: (anix@tnfu.ac.in, betsy@tnfu.ac.in)

Related posts

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு மக்களிடம் குறை கேட்பு!

Admin

பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது: தூத்துக்குடி அருகே வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்!

Admin

வ உ சிதம்பரனார் 86 வது குருபூஜை முன்னிட்டு விசிக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!