தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் கொடி மரம் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், இன்று காலை 6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம், யாகசாலை பூஜை, மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு தீபாரதணை, நடைபெற்றது..
இவ்விழாவில், நகர மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கொடி மரம் நடுதல் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதில், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, ராமமூர்த்தி, கோபி, விழா பூஜைகளை பூசாரி செல்வமாடத்தி, விஜயா, செய்திருந்தனர்.
இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.