தூத்துக்குடி, சவேரியார்புரம் ஊரின் பாதுகாவலர் புனித சவேரியார் ஆலய 134-ஆம் ஆண்டு திருவிழா கடந்த 24.11.2022 அன்று கொடியத்துடன் துவங்கி 03.12.2022 வரை 10 பத்து நாட்கள் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
தொடா்ந்து 30.11.2022 அன்று இரவு புனித சவேரியாரின் சப்பரப்பவனியும் 01.12.2022 அன்று இரவு நற்கருணை பவணியும் நடைபெற்றது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை 02.12.2022 அன்று காலை புது நன்மை திருப்பலி அன்று மாலையில், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி தலைமையில், மாலை ஆராதனையும் 03. 12. 2022 திருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து மாதா மற்றும் சவேரியாரின் சப்பரப்பவனியும் நடைபெற்றது.
பங்குத்தந்தை குழந்தை ராஜன் ஊர் நிர்வாகிகள் மற்றும் அருட்சகோதாிகள் இறைமக்கள் ஆகியோர் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.