Thupparithal
ஆன்மிகம்

தூத்துக்குடி மறைமாவட்டம் ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக துவக்கம்…!

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கைச் சோ்ந்த ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலய திருவிழா நேற்று (செப் 1), கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக்குரு அருட்தந்தை ஜான்பென்சன் அடிகளாா் தலைமையில், புதுக்கோட்டை தூய வளனாா் மெட்ரிக்பள்ளி தாளாளா் அருட்தந்தை ராபின் அடிகளாா் மறையுரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி சவோியாா்புரம் பங்கு அருட்தந்தை குழைந்தைராஜ் அடிகளாா் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

தாளமுத்துநகா் உதவி பங்குதந்தை அமல்ராஜ் அடிகளாா் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினாா்.. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை திருப்பலி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
திருவிழாவின் சிகர நிகழ்வான 9 ஆம் திருவிழா (செப் 9),சனிக்கிழமை மாலை ஊரைச் சுற்றி நற்கருணை பவணி நடைபெற இருக்கிறது. பின்னர், ஆராதனைக்கு மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை பன்னீா்செல்வம் அடிகளாா் தலைமையில் புதியம்புத்தூா் அருட்தந்தை சந்தீஸ்டன் அடிகளாா் மறையுரையாற்றுகிறாா். ஆரோக்கியபுரம் இறைமக்கள் சிறப்பிக்கிறாா்கள்…

10 ஆம் திருவிழா (செப் 10), ஞாயிறு காலை 5.45.மணிக்கு கூட்டுத்திருவிழா நடைபெறும்.. மறைமாவட்ட பொருளாளா் அருட்தந்தை சகாயம் அடிகளாா் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மேலும், தாளமுத்துநகா் பங்கு தந்தை அருட்தந்தையா்கள் நெல்சன்ராஜ் அடிகளாா் . அருட்தந்தை அமல்ராஜ் அடிகளாா் சிறப்பிக்கின்றாா்.. அன்று காலை திருப்பலி முடிந்தவுடன் சப்பரபவணி நடைபெறும்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, தாளமுத்துநகா் பங்குதந்தையா்கள், அருட்தந்தையா்கள் நெல்சன்ராஜ் அடிகளாா், அருட்தந்தை அமல்ராஜ் அடிகளாா் மற்றும் ஆரோக்கியபுரம் ஊா் நிா்வாகிகள் அருட்சகோதாிகள் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Related posts

தூத்துக்குடி மேலசண்முகபுரம்,, சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில்களில் பிரமாண்டமாக நடைபெற்ற வரலட்சுமி பூஜை..!

Admin

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி!.

Admin

மஹாளய அம்மாவாசை கொடை விழாவை முன்னிட்டு “ஸ்ரீ அதிர்ஷ்ட வெற்றி விநாயகர்” “ஐயா ஸ்ரீ செல்வ முனீஸ்வரர்” திருக்கோவில் 10ம் ஆண்டு கொடை விழா; முன்னாள் அமைச்சர் ம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!