தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறிப்பாக வாழைதார், வாழை இலை போன்றவற்றை விற்பனை செய்வதற்கு போதுமான வசதியில்லாமல் இருந்த நிலையில், கடந்த 1962ம் ஆண்டு சில விவசாய பிரமுகர்கள் இணைந்து தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டை தொடங்கினர்.
இதில், சுமார் 70 பங்குதாரர்கள், 10 இயக்குநர்கள் உள்ளனர். இச்சங்கத்தின் தலைவராக கடந்த 2000ம் ஆண்டு முதல் சி.த.சுந்தரபாண்டியன் இருந்தார். இந்நிலையில் கடந்த அக்.30ம் தேதி காலமானார். இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டத்தில் எஸ்டிஎஸ் ஞானராஜ் தலைராக தேர்வு செய்யப்பட்டார்.
செயலாளராக மணிராஜ், பொருளாளராக செபத்தையாபுரம் பரமசிவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைராக தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்டிஎஸ் ஞானராஜுக்கு கம்பெனி இயக்குநர்கள், பங்குதாரர்கள், மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மார்க்கெட் மேலாளர் நியூட்டன் உடனிருந்தார்.