தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட கமிட்டிகள் சார்பாக பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை மாநாடு நடைபெற்றது… இம்மாநாட்டில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது…
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி கூறுகையில், கிராமபுற வேலை வாய்ப்பு திட்டம் என்பது ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.. 15 கோடி குடும்பங்களை வறுமை பிடியில் இருந்து வெளியே கொண்டு வந்த திட்டம்.. ஐநா மன்றமே அந்த திட்டத்தை ஆதரித்து, இந்திய அரசாங்கத்தின் செயல்பாட்டை ஆதாரித்து நற்சான்றிதழ் கொடுத்தார்கள்.. மிக பெரிய சமூக நல திட்டம் அந்த திட்டம்.. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்குண்டான நிதியை தரவில்லை… ஆகவே, மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்பதற்காக வரும் 15ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…
தமிழக அமைச்சர்கள் மீது நீதிமன்றம் வருமான வரி சோதனை மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்ளலாம் என உத்தரவிடுகிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு? இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்ற மாநிலத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை… அது போன்று அனைத்து இடங்களிலும் செய்தால் ஏற்றுக் கொள்வார்கள்.. இந்திய மக்கள் குறிப்பாக, தமிழக மக்கள் அறிவு பூர்வமான மக்கள் .. அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு தரப்புக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்…
இரண்டரை வருடமாக தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். சாலைகள் தரமாக அமைக்கப்பட்டிருக்கிறது.. இதனால் அமலாக்கத்துறை சோதனை ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல, உத்தரபிரதேசம், அரியானாவில் இதே போன்று ரெய்டு நடத்தட்டும். இது அரசியல் நோக்கத்தோடு நடக்கின்ற ரெய்டு. இந்தியா கூட்டணி வலிமையோடு இருக்கின்ற காரணத்தினால் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்று செய்கின்றனர்.. இதற்கு தலைகுனிய மாட்டோம். தலை நிமிர்ந்து நிற்போம் என்றார்…