தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சண்முக குமாரி மகன் k.சரவணன் (எ) தருண்-சுபலஷ்மி திருமண விழாவானது தூத்துக்குடி தனியார் திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் மற்றும் பொது செயலாளருமான டிடிவி தினகரன் இன்று தூத்துக்குடி வருகை தந்தார்.. அங்கு திருமண மஹாலில் மன மக்களுக்கு தன் கையால் மாங்கல்யம் எடுத்து கொடுத்து வாழ்த்தினார்…
பின்னர், அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு? 024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் நாங்கள் தெரிவிப்போம்…
திமுக 3 ஆண்டுகள் ஆட்சி குறித்த கேள்விக்கு? கழுதை தெஞ்சு கட்டெரும்பான கதையாகயாக தான் உள்ளது.
மக்களை ஏமாற்றுவது தான் இந்த ஆட்சின்னுடைய செயல்பாடாகவே இருக்கிறது…
அதிமுக ஆட்சியில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பது குறித்த கேள்விக்கு? ஸ்லீப்பர் செல்கள் எப்போது வெளியவர வேண்டுமோ தேவையான நேரத்தில் வெளியே வருவார்கள்.
அதிமுகவிடன் இனி கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு ? அதிமுகவுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்த கேள்விக்கு? ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. அவர்களை ஏற்றுக் கொள்வது மக்கள் கையில்தான் இருக்கிறது..
அதிமுக-பாஜக கூட்டணி பிரிந்தது குறித்த கேள்விக்கு? ஏற்கனவே பாஜகவில் கூட்டணியில் இருந்தார்கள்.. பிஜேபியால் அனைத்து பலனும் அடைந்து கொண்டு தேர்தல் நேரத்தில் பிஜேபிக்கு துரோகம் செய்தார்கள்.. துரோகம் தான் அவர்களுடைய ஒரே குறிக்கோள்… அவர்களுடைய இயற்கையான சுபாவமே துரோகம் தான்.. அவரை முதலமைச்சராக்கியது மற்றும் ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பிஜேபிக்கும் துரோகம் செய்துள்ளார் என்றார்….