தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிகுட்பட்ட 20வது வார்டு ஊரணி தெரு பகுதியில் கடந்த இரண்டு வருட காலத்துக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்பொழுது புதிதாக கட்டப்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் மக்கள் பயன்பாட்டுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு ஊரணி தெரு உள்ள கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் தற்பொழுது புது ரோடு பகுதியில் உள்ள நகராட்சி பழைய கட்டிடத்தில் ஏங்கி வருகிறது. இதனால் 20வது வார்டு உரணித் தெரு அப்பகுதி மக்கள் அங்கே சென்று மருத்துவச்சிகிச்சை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.