Thupparithal
செய்திகள்

மாவீரன் பகத்சிங் 116வது பிறந்தநாள் விழா; கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் விடுதலைப்போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங்கின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவீரன் பகத்சிங் 116வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமையில் மாவீரன் பகத்சிங்கின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் மாலையணிவித்தார். இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்வில், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் முனைவர்.ஆ.சம்பத்குமார், கருப்பசாமி, கலைச்செல்வன், ரோட்டரி துணை ஆளுநர் முத்துச்செல்வம், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், ஆவல்நத்தம் லட்சுமணன், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மேரிஷீலா, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ரமேஷ், இசைக்கலைஞர் பிரபாகரன், வழக்கறிஞர் சிவபெருமாள், வழக்கறிஞர் மகேஷ், தொழிலதிபர் மோகன், ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுத்துரை, தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன், ஏஐடியுசி காளிராஜ், கருப்பசாமி, பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை செயலாளர் சண்முகராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Related posts

தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பேரணியை மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Admin

கோடைகாலம் தொடங்கியது உடலை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும்-தூத்துக்குடியில் நாற்பதாண்டு சேவையாற்றும் பிரபல மருத்துவர் அருள்ராஜ் விளக்குகிறார்.

Admin

கோவில்பட்டி, ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் கொடிமரம் நடும் விழா; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!