Thupparithal
செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா- அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11.29 லட்சம் மதிப்பிலான புதிய அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும்,
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து திறந்து வைத்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்; கல்வியின் வளர்ச்சிக்காக பள்ளியின் கட்டமைப்பு வசதிக்காக சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் 25 லட்ச ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டத்தை கொண்டு வந்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நிகழ்ச்சிக்கு அழைப்பதும் இல்லை மதிப்பதில்லை இது கண்டனத்திற்குரியது தவறான முன்னுதாரணமாக இருந்து வருகிறது..

மக்களால் ஏற்றுக் கொள்ளபட்டு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அன்று ஒன்று என்றால் அது அதிமுக தான்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் சாரி திமுக வாகவும் இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க தயாரா ..

தனியாக நின்று 37 இடங்களில் வெற்றி பெற்ற சரித்திரத்தை உருவாக்கிய கட்சிதான் அதிமுக.

செய்திகளுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சி நாங்கள் இல்லை.

தற்போதைய திமுக அரசு கையாளாகாத அரசு அதிமேதாவிகளை வைத்துக்கொண்டு நிதி வருவாயை பெருக்க எந்த ஒரு கட்டமைப்பு செய்யாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் திமுக அரசு உள்ளது.

இந்த அரசின் கையாலாகாத தனம் காரணமாகத்தான் பால் விலை தொழில் வரி மின்கட்டளை உயர்வு விரைவில் பல்வேறு கட்டண உயர்வு அறிவிப்பு வர உள்ளது.

திமுக என்றைக்கு ஆட்சிக்கு வந்தாலும் ஆணவத்திலே எதிர்க்கட்சியை மட்டும் அல்ல மக்களை ஏளனமாக பேசக்கூடியது கண்கூடாக பார்க்கப்படுகிறது.

ஓசி பஸ்ஸில் மக்கள் பயணம் செய்கிறார்கள் என்று அமைச்சர் கூறிய பேச்சுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்த பின்பே தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் அமைச்சர்.

மக்களைப் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விலையில்லா திட்டம் என்று கொண்டு வந்தார்கள் இலவசம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை.

திமுக ஆட்சி காலத்தில் 2006 -7 வரை மட்டுமே திரைப்பட துறையினர் மற்றும் சின்னத்திரையினருக்கு வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சி காலத்தில் 2008_14 வரை உரிய விருதாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகளை வழங்கினோம்.

அதிமுகவில் பிரிவே இல்லை அனைவரும் ஒன்றுபட்டு தான் இருக்கிறோம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக 40 இருக்கும் 40 வெல்வோம் அதற்கு தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சூரியபிரம்மன், ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், ஒன்றிய கவுன்சிலர் ராமர்,விவசாய அணி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மகளிர் அணி இணைச் செயலாளர் ராமலட்சுமி, மகளிர் அணி ஒன்றிய இணைச் செயலாளர் ஆனந்தி, ஊத்துப்பட்டி பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி சரவணன், ஊத்துப்பட்டி கிளை செயலாளர் ரவி, கிளைச் செயலாளர் மாரிமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,மகளிர் அணி இணை செயலாளர் ராமலட்சுமி, அதிமுக நிர்வாகிகள் அல்லித்துரை, கோபி,முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்‌.

Related posts

தூத்துக்குடி ட்ரையல்ப்ளேசர்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் குறுங்காடு வளர்க்கும் திட்டம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.

Admin

திம்மராஜபுரம் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்க தொட்டி; தூத்துக்குடி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தொடங்கி வைத்தார்.

Admin

தூத்துக்குடி அருகே நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் மாற்ற ரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய இளநிலை பொறியாளர் கைது

Admin

Leave a Comment

error: Content is protected !!