Thupparithal
செய்திகள்

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி!.

இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் அறிக்கையில் கூறியுள்ளதாவது; மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form ) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை ( Guidelines ) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை / துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்; 02.11.2022 மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0461-2320458 மற்றும் 9384824352 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளர்.

Related posts

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வரலாற்று துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா!.

Admin

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மின்மோட்டார் வாங்க மானியம் : ஆட்சியர் தகவல்

Admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வாழ்வாதாரத்திற்காக மனு அளிக்கிறோம் எங்கள் போராட்டம் ஜெயிக்கும் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!