தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வரலாற்று துறையும், கல்லூரியின் சமுக மேம்பாட்டு திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து குழந்தைகள் தின விழா நிகழ்வு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட கீழ அழகாபுரி கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் வரலாற்று துறை இளங்கலை 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர் முத்துமாரி பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி செயலர் டாக்டர் C. ஷிபானா, முதல்வர் டாக்டர் A. S. J. லூசியா ரோஸ், மற்றும் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியைகள் ஜேன் டி அல்மெய்டா, கெ.மேரி வினோ லோபோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.