தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
புரட்சி திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை அறக்கட்டளை நிறுவன தலைவர் முத்து கணேஷ் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சமத்துவ மக்கள் கட்சி நகர மகளிர் அணி செயலாளர் ரதிதேவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் மாணவ மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.