தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட இராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரூ 9.98 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டும் பணி பூமி பூஜை நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழா விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கவுன்சிலர் சிவகுருநாதன், மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.