தூத்துக்குடியில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 26 வயது நிரம்பிய பெண்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் , ஓசூர் இணைந்து தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியில் வைத்து 19.11.2022 சனிக்கிழமை அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது .
மேற்படி முகாமில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான பெண் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர் . இம்முகாமில் துரத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 26 வயது நிரம்பிய பெண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் . பெண்கள் 145 செ .மீ உயரம் 45 கிலோ முதல் 65 கிலோ வரை எடை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் .
இந்த பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு மாதம் ரூ .16557 / – ( CTC ) ஊதியம் வழங்கப்படும் . தேர்வு செய்யப்படும் பெண் பணியாளர்களுக்கு உணவு , தங்குமிடம் வழங்கப்படடும் மற்றும் அரசு நலத்திட்டங்கள் பெறுதல் , உயர்கல்வி பயிலும் வசதி போன்றவை சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேற்படி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் 19 : 11 : 202 தேநி காலை 8.00 மணி முதல் 10.00 மணிக்குள் தங்களுடைய சுய விபரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் தூத்துக்குடி வ உ சி கலைக்கல்லூரியில் நடக்கும் வேலை வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கோட்டு கொள்ளப்படுகின்றனர்.