Thupparithal
செய்திகள்

தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த கோமான் ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து 153 வது பிறந்தநாள்; எம்பி, அமைச்சர், மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை!.

தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த கோமான் என்று அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன், ஓட்டப்பிடார சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், மாநகர தலைவர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவர்அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கந்தசாமி, ரெங்கசாமி,பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, திமுக 39 பகுதி வட்டகழக செயலாளர் கீதா செல்வமாரியப்பன், மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் பிரைட்டர், காங்கிரஸ் கட்சியின் மாநகரத் தலைவர் முரளிதரன், நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேல்ராஜ், மக்கள் நீதி மையம் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர், மற்றும் பரதநல தலைமைச் சங்கத்தின் சார்பிலும் மீனவ சமுதாய மக்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related posts

அழுகிய முட்டை சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி? அமைச்சர் கீதாஜீவன் கூறிய பதில் என்ன??

Admin

பணியில் இருந்த போது இறந்த தந்தை; கருணை அடிப்படையில் மகனுக்கு பணி ஆணையை வழங்கிய சண்முகையா எம்எல்ஏ!.

Admin

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர திமுக இளைஞரணி சார்பில் தூத்துக்குடியில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கும் முகாம்- அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!