Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அனைத்து கட்டமைப்புகளும் சில மாதங்களுக்குள் முடிவடைந்து புதிய பொழிவுடன் ஜொலிக்கும்-மேயர் ஜெகன் பெரியசாமி உற்சாகம்!.

தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினரக்ளின் மாதாந்திர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்டரங்கில் இன்று (30.01.2023) காலை நடைபெற்றது.

அதிமுக கவுன்சிலர் வெற்றிச் செல்வன், வக்கீல் மந்திர மூர்த்தி உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய சாலை, கால்வாய், மின்விளக்கு, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளையும், நாய்களையும் தடுப்பது, பூங்காக்கள் வேண்டியும், குடிநீர் முறைப்படுத்தி வழங்க கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் ராஜேந்திரன் ஆகியோர் பதிலுரை வழங்கினார்கள்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதிலுரை வழங்கி பேசுகையில்: மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முழுமையான பணிகள் நல்ல முறையில் நடைபெற கவுன்சிலர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். 20 அடி, 40 அடி சாலைகளில் ஆரம்பம் முதல் முடிவு வரை முழுமையாக புதிய சாலைகள் அமைக்கப்படும். அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் பாரபட்சமின்றி அகற்றப்படும்.

எதிர்காலத் தலைமுறையைக் கருத்தில் கொண்டு பணிகள் நடைபெறுகின்றன. இதில் பாராபட்சம் யாருக்கும் கிடையாது. மாநகராட்சியில் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படும். 151 பூங்கா இருக்க வேண்டிய இடத்தில் 40 பூங்காக்கள் மட்டுமே இருந்து வருகின்றன. அதையும் கண்டறியப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படும். புதிதாக திறக்கப்பட்டுள்ள பல பூங்காக்களுக்கு மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து கண்டுகளித்து மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்கின்றனர். இதுபோன்ற செயல்கள் மூலம் ஏழைகளின் சிரிப்பின் மூலம் இறைவனை காண்கிறோம். எண்ணற்றப் பணிகள் நம்மை எதிர்நோக்கி இருக்கின்றன.

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அனைத்து கட்டமைப்புகளும் சில மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டு புதிய பொழிவுடன் ஜொலிக்கும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் முத்துவேல், தெய்வேந்திரன், ஜெயசீலி, மதிமுக கவுன்சிலர் ராமுத்தம்மாள், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் மேயர் மற்றும் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும், மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கனகராஜ், பொன்னப்பன், இசக்கிராஜா, ராமகிருஷ்ணன், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், பவானி மார்ஷல், சரண்யா, அதிஷ்டமணி, நாகேஸ்வரி, ஜெபஸ்டின் சுதா, ஜாக்குலின்ஜெயா, பேபி ஏஞ்சலின், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், மதிமுக கவுன்சிலர் ராமுத்தம்மாள், கம்யூனிஸ்ட் முத்துமாரி உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்றிய பணிகளுக்கு அமைச்சர் கீதாஜீவனுக்கும், மேயருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மாநகர வளர்ச்சிப் பணிகள் குறித்து 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உதவி ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவோம், தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

செய்தியாளர் மு.மணிகண்டன்

Related posts

தூத்துக்குடி அருகே நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் மாற்ற ரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய இளநிலை பொறியாளர் கைது

Admin

74வது குடியரசு தின விழா; தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மூவர்ண கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Admin

76வது சுதந்திர தின விழா; அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை; முன்னாள் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி பொது மக்களுக்கு இலவசமாக அளிப்பதற்கு தேசிய கொடி வாங்கினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!