ஓட்டப்பிடாரத்தில் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களின் விண்ணப்ப படிவத்தை கனிமொழி எம்பியிடம் ஒன்றியச் செயலாளர் இளையராஜா வழங்கினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் , மீனவர் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்டப் பிரதி நிதிகள் கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி -யிடம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் புதிதாக சேர்ந்த 5 ஆயிரம் உறுப்பினர்களின் படிவத்தை ஒன்றியச் செயலாளர் இளையராஜா வழங்கினார்.
புதிய உறுப்பினர் படிவத்தை வழங்கும் போது, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.