முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் திரு உருவச்சலைக்கு அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள செம்புதூர் மற்றும் துறையூரில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு துறையூர் கணேச பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரைற்றினார்.
இவ்விழாவில், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், அழகர்சாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகை பாலன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி
வள்ளியம்மாள், மாரியப்பன், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி, அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன்,பழனி குமார்,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.