திராவிட முன்னேற்ற கழக அரசை கண்டித்து, தூத்துக்குடி, இந்து மக்கள் கட்சி சார்பாக ஸ்ரீசங்கரராமேஸ்வரர் ( சிவன் கோவில்) திருக்கோவில் முன்பு பெரியார் எழுதிய இறுதிப்பேருரை மரண சாசனம் புத்தகத்தின் 21- வது பக்க அச்சு பிரதியை இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்த குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் மாநில செயலாளர் வசந்த குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் திராவிட அரசால் தந்தை பெரியார் என்று போற்றப்படுகின்ற அவர் திமுகவை வர்ணித்துள்ளார். அதனை பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, தெரியப்படுத்தி வருகிறோம்.
கிறிஸ்துவ பாதிரியாரால் மொழி பெயர்க்கப்பட்ட மனு ஸ்மிருதியை கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது மக்களுக்கு வழங்கியது. இதற்கு அனுமதி வழங்கிய திமுகவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பாக பெரியார் எழுதிய இறுதிப்பேருரை மரண சாசனம் புத்தகத்தின் 21- வது பக்க அச்சு பிரதி பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி அளிக்காதது கண்டனத்திற்குரியது எனவும் கூறினார்.
பின்னர், இதற்கு அனுமதி அளிக்காததை தொடர்ந்து, தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் 13 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.