தூத்துக்குடி மாநகரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், இடமாற்றம், திருத்தம், நீக்கல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முகாம்களை ஆய்வு செய்தார்.
பின்பு, வாக்காளர் பட்டியலில் வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் ஆதார் அட்டை எண்களை இணைக்காத நபர்களை அணுகி உரிய ஆவணங்கள் பெற களப்பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்களா? என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்கள்.
ஆய்வின் போது, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், தேர்தல் பணி தொடர்பான துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்