திருநெல்வேலி டவுண் முதல் குறுக்குத்துறை செல்லும் சாலைக்கு தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் பெயரை நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளனர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவில்பட்டியை சேர்ந்த கரிசல் இலக்கிய அமைப்பின் நிறுவனர் ராஜகோபால், தலைவர் RJ மணிகண்டன், சட்ட ஆலோசகர் கிருஷ்ணகுமார் ஆகியோர் இன்று மாநகர மேயர் சரவணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 16 ம் தேதி தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பெயரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் கட்டடம் அல்லது சாலை என ஏதேனும் ஒரு பணிக்கு கவிஞரின் பெயர் சூட்டி கௌரவிக்க வேண்டும் என கரிசல் இலக்கிய அமைப்பினர் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.