Thupparithal
செய்திகள்

திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசன கட்டணம் கடும் உயர்வு: போராடிய இந்து முன்னணி, பக்தர்கள் மீது தாக்குதல்: பாஜக மாவட்ட தலைவர் கடும் கண்டனம்…!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பாக திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசன கட்டணம் ரூ.1000, 2000 மற்றும் 3000 என்று வசூலிக்கப்படுகிறது. இந்த அநியாய வசூலை தடுக்க அற வழியில் நேற்று (நவ 16) போராடிய இந்துமுன்னணி மற்றும் முருக பக்தர்களை அடக்குமுறையில் கைது செய்த காவல்துறையின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசு தாங்கள் வழங்கிய மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயை பக்தர்கள் மூலமாக அபகரித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டண உயர்வு உள்ளது. சனாதான தர்மத்திம் மீது நம்பிக்கை கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதை தடுக்கவே தரிசன கட்டண உயர்வை இந்த அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

மன அமைதிக்கும், கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்தவும், வரும் ஏழை பக்தர்கள் இந்த கட்டண உயர்வை கன்டு மனம் கொதித்து செல்கின்றனர். நேற்று லட்சகணக்கான முருக பக்தர்கள் கோவிலை சுற்றி விரதம் இருந்துகொண்டிருந்த வேளையில் காவல்துறை முருக பக்தர்களையும் இந்து முன்னனி தொண்டர்களையும் அடித்து கைது செய்ததை முருக பக்தர்கள் கண்டு மனவேதனை பட்டார்கள்..

திருச்செந்தூர் கோவிலில் முருக பக்தர்களுக்கு எதிரான போக்கை இந்து சமயஅறநிலையத்துறை தொடர்ந்து கடைபிடிக்ககுமேயானால் முருக பக்தர்களை திரட்டி மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெறும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்..

Related posts

கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் 50வது ஆண்டு பொன் விழா; கேக் வெட்டி ஒய்வு பெற்ற பணியாளர்கள் கெளரவிப்பு.

Admin

பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா. அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை!.

Admin

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் பிப். 24இல் கண்காட்சி: விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

Admin

Leave a Comment

error: Content is protected !!